ஆப்கானிஸ்தான் படக்ஷன் மாகாணத்தில் உள்ள ஜெபக் மாவட்டத்தில் இந்திய விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
படக்ஷன் மாகாணத்தில் உள்ள தலிபான்களின் கலாசாரத் தலைவர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
நேற்றிரவு இந்த விமானம் ரேடாரில் இருந்து விலகியதாக படக்ஷன் பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் அதன் விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் எதுவும் கூறவில்லை.