Our Feeds


Friday, January 19, 2024

SHAHNI RAMEES

இந்த ஆண்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை




இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை

விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.


இதற்காக முக அடையாளம் மற்றும் கைரேகை தரவுகள் சேகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இவ் வேலைத்திட்டம் இவ்வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த அவர், குருநாகல் மற்றும் கண்டி மாவட்ட அலுவலகங்களில் முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


வடமேல் மற்றும் மத்திய மாகாண அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், தேசிய அடையாள அட்டைகளின் ஒரு நாள் சேவைக்காக பொதுமக்கள் கொழும்புக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


குடிமக்களின் தரவுகள், கைரேகைகள் மற்றும் முகத்தை அடையாளம் காணுதல் தொடர்பான தரவுகள் சேகரிப்பு அனைத்து பிராந்திய செயலகங்கள் ஊடாக எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.


  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »