சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலர்டைஸ் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்தார்.
அவருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் கூடிய சந்திப்பாக இது அமைந்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.