Our Feeds


Thursday, January 25, 2024

SHAHNI RAMEES

செங்கடல் தாக்குதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் - ஐ.நா எச்சரிக்கை

 

செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இத்தாக்குதல் தொடா்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் நேற்று(24) எச்சரித்தாா்.



ஐ.நா. பொதுச் சபையின் 78ஆவது அமா்வின் தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ், இந்தியாவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக கடந்த திங்கட்கிழமை(22) சென்றார்.



இதற்கிடையே செய்தி நிறுவனமொன்றுக்கு அவா் நேற்று(24) அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: செங்கடலில் தொடா்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இத்தாக்குதல் தொடா்ந்தால் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக் கூடும். செங்கடலில் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தொடங்கிய தாக்குதலுக்கு மூன்றாம் தரப்பினா் உதவுவதுபோலுள்ளது. எனவே சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது.



அதேபோல் காஸா பிரச்னைக்கு அமைதி வழியே தீா்வு. இஸ்ரேல்-பலஸ்தீனம் என இரண்டும் தனிநாடுகளாக செயல்பட வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »