புதிதாக ஐக்கிய மக்கள் சக்தியில் பிறர் இணையும் போது, ஏற்கனவே கட்சியில் தற்போதைய இருந்த உறுப்பினர்கள் ஓரங்கட்டப்படக் கூடாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
"புதியவர்களுக்கு இடமளிக்கும் போது 2020 இல் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட SJB இன் தற்போதைய உறுப்பினர்கள் பாதிக்கப்படக்கூடாது" என்று பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
"கட்சி மாறி வந்தவர்கள் கட்சியின் ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். கட்சித் தலைவரைக் காட்டிலும் கட்சியின் சாதாரண உறுப்பினர்களுடன் பழக வேண்டும் என்பதால் இது அவசியம்," என்று அவர் மேலும் கூறினார்.