சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக ஆராய்ந்த பிறகு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
அதேவேளை சம்மாந்துறை வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ள அனர்த்தம் தொடர்பில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதோடு பல்கலைகழக தாழ்நில பிரதேசத்தில் காணப்படுகின்ற அசையும் சொத்துக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.
(பெரியநீலாவணை செய்தியாளர் - ஏ.எல்.எம்.ஷினாஸ்)