Our Feeds


Wednesday, January 24, 2024

News Editor

நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை


 குருநாகல் பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரி மற்றும் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரி ஆகியவற்றில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த சென்ற போது ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரியவந்தது.

பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் 43 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 21 ஆசிரியர்களே உள்ளனர். மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரியில் 63 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 33 பேரே உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் 40000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், இந்தப் பிரச்சினைக்கு முறையான தீர்வு தேவை. இவ்விரு பாடசாலைகள் மட்டுமின்றி ஏனைய பாடசாலைளிகளிலும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். இல்லையேல் இது முழு கல்வி முறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »