ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (25) மாலை 4 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்
யாழ். மத்திய பேருந்து நிலையத்தின் முன் இந்த போராட்டம்
இடம்பெறவுள்ளது.தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் இடம்பெறும் இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் அணி திரளுமாறு யாழ். ஊடக அமையம் கேட்டுக்கொண்டுள்ளது.