பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக
பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்காக அவர் அமெரிக்க பிரஜாவுரிமையையும் ரத்து செய்துவிட்டு, இலங்கை திரும்பவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இருந்த போதும், பசில் ராஜபக்ஷவையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதுகுறித்து கட்சி உத்தியோகப்பூர்வமாக விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
(நன்றி: அய்வரி)