சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும் நீதி நடவடிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பிரிவு சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையும் இந்தப் பணி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அமைச்சர் பதவியில் இருக்கும் வரை சர்வதேச சமூகத்திற்குத் தேவையான வகையில் செயற்படப் போவதில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களை பலப்படுத்துவதே தாம் முதலில் செய்ய வேண்டியிருந்தது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ சீருடையை அணிந்து கொண்டு யாராவது ஒருவரை தாக்க வந்தால் பதிலுக்கு தாக்க வேண்டும் அல்லது அதற்குரிய சீருடையினால் எந்த பயனும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்ததாகவும், ஜனாதிபதி தமக்கு வழங்கிய பலத்தினால் தான் அந்த முடிவுகளை எடுக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.