2015 ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியாக வரவில்லையென்றால் நாடு இன்று இருப்பதை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அன்றைய வெற்றியின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் ஆதரவை மீண்டும் பெற முடிந்தது என்றார்.
தெகிவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஊழல், மோசடி, திருட்டு, வீண், நாட்டின் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில்
நிரப்பி நாட்டை பாதாளத்திற்கு கொண்டு வந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர என்னால் முடிந்தது.
எனது போட்டியாளரான மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் நாடு இன்று இருப்பதை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என அவர் அங்கு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்பும் கூட்டணியொன்றை கட்டியெழுப்புவதற்கு தற்போது செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.