அதன்படி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தநபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றைய தினம் உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தநபர் 55 வயதுடைய அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்தவர் என்டிஜன் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.