பொதுமக்களின் அமைதியை சீர்குலைத்தமை, அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியமை மற்றும் பொதுமக்களை ஆத்திரமடையச் செய்யும் வகையில் காணொளிகளை வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சமூக செயற்பாட்டாளரான பியத் நிகேஷல குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினால் இன்று(29) கைது செய்யப்பட்டார்.
வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டார்.