Our Feeds


Saturday, January 6, 2024

News Editor

மீண்டும் அதிகரித்த சீமெந்தின் விலை!


 மீண்டும் சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நிர்மாணத் துறை வளர்ச்சியைக் காட்டத் தொடங்கியுள்ள நிலையில் இவ்வாறு விலைகளை உயர்த்துவது பாரதூரமான நிலை என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய கட்டுமான சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர,

"கட்டுமானத் துறை ஒரு வீழ்ச்சியடைந்த துறை. எங்களின் அழுத்தம் காரணமாக சீமெந்து விலை ஓரளவு குறைந்து. இந்நிலையில் தொழிற்துறை ஓரளவு முன்னொக்கி செல்லும் வேளை, ​​ஒரு மூட்டை சீமெந்து விலை 320 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே அநியாயமான செயல். ஜனவரியில் இருந்து, 18 சதவீத வெட் வரிக்கு மக்கள் பயந்தனர். இந்த பயத்துடன் இந்தத் துறையில் உள்ள தயாரிப்பாளர்கள் இதை அதிகரிக்க அழுத்தம் கொடுத்ததுதான்.

"மூலப்பொருட்கள் வெளியிடுவது நிறுத்தப்பட்டதால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, மூலப்பொருட்களின் விலை 3% அதிகரித்திருக்க வேண்டும், ஆனால் மூலப்பொருட்களின் விலை 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வளவு அநியாயமான செயல் இது?" என்றார்.

இதேவேளை, சந்தையில் சீமெந்து மூடை ஒன்று 2450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக கட்டிடப் பொருள் வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »