Our Feeds


Tuesday, January 30, 2024

SHAHNI RAMEES

முதலிடத்தை இழந்தார் எலான் மஸ்க்

 


உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்

முதலிடத்தை இழந்தார்.


எலான் மஸ்க்கை 2ஆவது இடத்துக்கு தள்ளிவிட்டு பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னொல்ட் முதலிடத்தை பிடித்தார். பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடம் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பணக்காரர் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை, பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க், எக்ஸ் தளம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.


அர்னால்டின் சொத்து மதிப்பு 207.8 பில்லியன் டொலராகவும், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 204.7 பில்லியன் டொலர் உள்ளது. இதனால், உலகின் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தை கைப்பற்றினார் பெர்னார்ட் அர்னால்ட்.


போர்ப்ஸ் அறிக்கைப்படி, உலகின் முதல் 10 பணக்காரர்கள்:

பெர்னார்ட் அர்னால்ட் (207.6 பில்லியன் டொலர்) 

எலான் மஸ்க் (204.7 பில்லியன் டொலர்) 

ஜெப் பெசோஸ் (181.3 பில்லியன் டொலர்) 

லாரி எலிசன் (142.2 பில்லியன்டொலர்) 

மார்க் ஜுக்கர்பெர்க் (139.1 பில்லியன் டொலர்)

வாரன் பபெட்(127.2 பில்லியன் டொலர்) 

லாரி பேஜ் (127.1 பில்லியன் டொலர்)

பில் கேட்ஸ் (122.9 பில்லியன் டொலர்) 

செர்ஜி பிரின் (121.7 பில்லியன் டொலர்) 

ஸ்டீவ் பால்மர்(118,8 பில்லியன் டொலர்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »