இன்று காலை நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியில்
கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், காயமடைந்த நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியொன்று பாரவூர்வுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்த நிலையில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.