இலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நேற்று (06) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை மருத்துவ சங்கத்தின் 136வது தலைவர் ஆவார்.
அங்கு கருத்து தெரிவித்த நிபுணர், நாட்டில் மருந்து தட்டுப்பாடு மெல்ல மெல்ல குறைந்து வருவதாக தெரிவித்தார்.
மருந்துப் பற்றாக்குறையை மேலும் குறைக்கும் வகையில் சுகாதார அமைச்சுக்கு ஆலோசனைகளை வழங்கி விசேட வைத்தியர்கள் சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்படத் தயார் எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.