கரட் விலை அதிகரித்துள்ளது என்றால் வேறு காய்கறிகளை சாப்பிட மாற்றுமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்திருந்தார்.
“.. எங்களுக்கு பொதுத் தேர்தல் குறித்து தெரியாது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராகி வருகிறோம். பொஹட்டுவ பொதுத்தேர்தலை கோரவில்லை ஊடகங்கள் பொஹட்டுவ கோரியதாக சொல்கின்றது, நாம் ஜனாதிபதித் தேர்தலையே கோரினோம்.
சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை நாம் எடுப்போம். நாம் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று இல்லை. நாட்டை முன்னெடுத்துத் செல்லத்தான் நபர் ஒருவர் தேவை. அதற்காக நல்லதொரு நபரை முன்வைப்போம்.
நாளுக்கு நாள் தலைவர்கள் உருவாகுவார்கள். தலைவர்கள் மறைகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க நல்ல தலைவர். அவர் நாட்டினை முன்னெடுத்துச் சென்றவர். லைனில் நின்ற யுகத்தினை இல்லாமல் செய்தவர். அவர் உண்மையிலேயே நல்ல தலைவர்தான். மக்கள் கஷ்டத்தில் தான் இருக்கிறார்கள். அது உண்மை தான்.
யுக்திய நல்ல விதமாக முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கு யாரும் மூக்கினை நுழைக்கக்கூடாது அது தவறு.
மரக்கறி விலைகள் வானமளவிற்கு உயர்ந்துள்ளது. வரலாறு காணாத கரட் விலை உண்மைதான். அதற்கு மாற்று வழிகளை நாம் பின்பற்ற வேண்டும். கரட் தான் சாப்பிடனும் என்று இல்லை. வேறு எதுவும் சாப்பிடலாம்…”