மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார நிலையத்தின் ஆலோசகருமான அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 750 ரூபாயாகவும், பீட்ரூட்டின் விலை 380 ரூபாயாகவும், கோவாவின் விலை 500 ரூபாயாகவும், போஞ்சியின் விலை 600 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
அத்துடன், லீக்ஸ் மற்றும் தக்காளி உள்ளிட்ட ஏனைய மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
மேலும், மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாகவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.