பௌத்த மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட “விஸ்வ புத்தரை” எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் மீறி மீண்டும் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், சந்தேக நபரை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது