ஒரு தரப்பினருக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (18) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பல்கலைக்கழக அமைப்பில் உள்ளக சிக்கல்கள் உருவாகி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி 23 தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பொது மாநாட்டின் இணைச் செயலாளர் கே.எல்.டி.ஜி.ரிச்மண்ட் தெரிவித்தார்.
இதேவேளை, வைத்தியர்களின் DAT கொடுப்பனவு 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச தாதியர் சங்கம் நேற்று (17) ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை 7.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது.