பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (09) காலை 08.00 மணிக்கு அரச வைத்தியசாலைகளில் மருத்துவப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் சில கொடுப்பனவுகளை உயர்த்தும் தீர்மானத்திற்கு எதிராகவும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
வைத்தியர்களுக்கான Disturbance, Availability & Transport (DAT) கொடுப்பனவை இரட்டிப்பாக்க ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, (DAT) கொடுப்பனவை ரூ.35,000 லிருந்து ரூ.70,000 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.