வாட் வரி உயர்வால், சீமெந்து விலை ரூ.150 அதிகரித்து ரூ.350 ஆக உள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விலை உயர்வின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை 2,300 ரூபாவாகவும், மற்றுமொரு நிறுவனத்தில் சீமெந்து மூட்டையின் விலை 2,450 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரி உயர்வுக்கு முன், சில நிறுவனங்களில் சீமெந்து மூட்டையின் விலை, 1,980 ரூபாயாகவும், சில நிறுவனங்களில், சீமெந்து மூட்டையின் விலை, 2,300 ரூபாயாகவும் இருந்தது.