Our Feeds


Sunday, January 21, 2024

News Editor

முட்டை விலை அதிகரிப்பு!


 வற் வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை இன்று (21) முதல் 8 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இதன்படி சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை 43 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கம்பஹா பிரதேசத்தில் இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »