முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்
பிரிவில் போர் காலத்தில் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கான நிதி உதவிகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.2010 மீள் குடியேற்றம் நடைபெற்ற போது சேதமடைந்த வீடுகளுக்கான நிதி உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் தற்போது பல வீடுகளுக்கு நிதி உதவி கிடைக்காததன் காரணமாக வீடுகளை புனரமைக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீள் குடியேற்ற காலங்களில் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறி நிரந்தர வீட்டுத் திட்டங்கள் பல குடும்பங்களுக்கு மறுக்கப்பட்டதுடன் வீடுகளை புனரமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் அந் நிதி உதவி கிடைக்காததன் காரணமாக வீடுகளை புனரமைக்க முடியாத நிலையில் பல குடும்பங்கள் உள்ளன.
இறுதிப் போர் காலத்தில் புதுக்குடியிருப்பில் பல வீடுகள் அழிவடைந்தும் சேதமடைந்தும் உள்ளன. புதுக்குடியிருப்பு நகரத்தில் கூட அழிவடைந்த கட்டடங்கள் பல இடங்களில் அகற்றப்படாமலே உள்ளன.
பல காணிகள் தொடர்ந்தும் விலங்குகள், பாம்புகளின் உறைவிடமாக உள்ளதாக பொது மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
ந. கிருஸ்ணகுமார்