இலங்கையின் முன்னணி உருக்கு கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனம் சமூகக் கடமையை சரியாக உணர்ந்து செயற்படுமொரு நிறுவனம் என்ற வகையில் நகரங்களை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு நகர மண்டப ஒடெல் சுற்றுவட்டாரத்திலிருந்து தாமரைத் தடாக அரங்கு வரை உள்ள வீதிக்கு மத்தியில் அழகிய தாவரத் தொகுதிகளை உருவாக்கி பராமரிக்கும் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமது பூரண அனுசரணையை மெல்வா நிறுவனம் வழங்கியுள்ளது.
அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டுயெழுப்புவதில் நகரங்களை அழகுபடுத்தும் செயற்பாடு முன்னுரிமை பெறுவதோடு குறிப்பாக, கட்டுமானங்களின் போது சூழலை அழகுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதானது தற்போது கட்டாயமாக உள்ளது.