Our Feeds


Sunday, January 21, 2024

SHAHNI RAMEES

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவு

  



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21) காலை கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில் அக்கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 186 வாக்குகளைப் பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்றிருந்தார்.



கட்சியின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்ட நிலையில், கூட்டத்தின் ஆரம்பத்தில் சீ.யோகேஸ்வரன் போட்டியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »