நாட்டில் இன்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளதுடன், அரசியலமைப்பின் 70 வது சரத்து மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகள் நிறைவடையும் என குறித்த வர்த்தமானி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.