2000 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ரயில் தடம் புரளும் சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ரயில் தடம் புரளும் சம்பவங்கள் இருமடங்காக அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் 98 ரயில் தடம் புரண்டுள்ளது, அவற்றில் 54 ரயில்வே யார்டுகளிலும், மேலும் 44 ரயில் தண்டவாளங்களிலும் நடந்துள்ளன.
2021 ஆம் ஆண்டில் ரயில் தடம் புரண்ட சம்பவங்களின் எண்ணிக்கை 115. மேலும் 75 ரயில் பாதைகளில் தடம் புரண்டது, மீதமுள்ள 40 ரயில் தண்டவாளங்களில் நடந்துள்ளது.
2022ல், ரயில் தடம் பிறழ்வுகளின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது; அவற்றில் 94 ரயில் தண்டவாளத்தில் நடந்துள்ளன என திணைக்களம் தெரிவித்துள்ளது.