ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்நாயக்கவை நியமிக்க ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.