கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் இன்று (05) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
01 கிலோ கீரி சம்பாவின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபாவாகும்.
2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகளின் போது, நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தகர்களிடமிருந்து வசூலித்த அபராதத் தொகை 27 கோடியே 84 லட்சம் என தெரிவிக்கப்படுகின்றது.
கடைகளில் அதிக விலைக்கு அரிசி விற்கப்பட்டால், 1977 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.