புத்தாண்டின் முதல் வாரத்தின் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் 4ஆம் திகதி வரையில் 25 ஆயிரத்து 619 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள், மீதமுள்ளவர்கள் இந்தியா, ஜேர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகைத்தந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.