மத்திய மாகாணத்தில் இயங்கும் சகல பாடசாலை சேவை வாகனங்களையும் மேற்பார்வை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண பிரதான செயலாளர் அஜித் பிரேமசிங்க தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் துறை வாகங்கள் பல வற்றில் பல்வேறு ஊழல்கள் இடம் பெறுவதாகக் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக பாடசாலை விடுமுறை காலங்களில் முழுமையாக முழு மாதத்திற்குமான மொத்தக் கட்டணத்தை பெற்றோர் செலுத்தும் படி கோராப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்தன.
இது போன்று இன்னும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் எனவே அவற்றை மேற்பகார்வை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
(ஜே.எம். ஹாபீஸ்)