பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற போது, அதில் பயணித்த ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பி ஓடியதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (6) இரவு 10.45 மணியளவில் சிலாபம் - புத்தளம் வீதியில் ஆராச்சிக்கட்டுவ - ஹலம்பவடவன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
பின்னர், அவர் சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளார்.
சந்தேக நபரை தேடி ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.