திறந்த பொருளாதாரத்தில் முழுமையாகப் பயனடையும் வகையில் நாடு முழுவதும் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி, தேசிய பொருளாதாரத்தை பத்து மடங்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த அபேசேகரராமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போதி மதில் மற்றும் தங்க வேலி திறப்பு நிகழ்வில் நேற்று கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
" நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதனால்தான், துரதிர்ஷ்டவசமாக, வற் வசூலிக்க வேண்டியேற்பட்டது. இப்போது நாம் எதிர்மறை பொருளாதாரத்திற்கு பதிலாக நேர்மறை பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறோம்.
புதிய தொழில்துறைகள் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க வேண்டும். அதற்கான தகுந்த சூழலை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். நாடு முழுவதும் பியகம முதலீட்டு வலயம் போன்ற முதலீட்டு வலயங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதார வேகத்தை பத்து மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்." என்றார். (