டெங்கு காய்ச்சலைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான பொது அழைப்புகளுக்கு அவசர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு பிரிவினால் ஸ்தாபிக்கப்பட்ட 011- 7 966 366 என்ற இந்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு சனி – ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை டெங்கு நோய் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதுடன் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் குறித்தும் தெரிவிக்க முடியும்.