சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சர் தௌபிக் அல் ரபியாவின் அழைப்பின் பேரில், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சவுதி அரேபியாவிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது 2024 ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் யாத்திரை மற்றும் ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது
சவூதி அரேபிய அரசாங்கம் இந்த ஆண்டு இலங்கையிலிருந்து 3500 ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஹஜ் கோட்டாவை வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்குமாறும், ஹஜ் யாத்திரிகர்களுக்கு உதவுவதற்கும் வழிகாட்டுவதற்கும் மேலதிக இலவச கோட்டாக்களை வழங்குமாறும் புத்ததாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.