Our Feeds


Wednesday, January 24, 2024

News Editor

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு


 2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்திருந்தார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், விடைத்தாள்களை பரீட்சை செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வருட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை ஆய்வு செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குமாறு அமைச்சுப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »