கணக்காய்வு அதிகாரிகளுக்கான சுமார் 400 பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன என கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கணக்காய்வு நடவடிக்கைகளை அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கணக்காய்வு அதிகாரி பதவிக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.