இங்கிலாந்து இளவரசி ஆன் (Her Royal Highness The Princess Royal, Princess Anne), இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்தார்..
அதன்படி அவர் இம்மாதம் 13ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – பிரித்தானிய உறவின் 75ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது.
மறைந்த எலிசபெத் மஹாராணியாரின் இரண்டாவது மகளும் ஒரேயொரு பெண் வாரிசும் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் ஒரே ஒரு சகோதரியும் இவர் என்பது குறிப்பித்தக்கது.