முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கொழும்பு ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் துமிந்த சில்வா, சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மருத்துவர்களின் பரிந்துரைகள் மீண்டும் கிடைக்கப்பெற்றால், அவர் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.