Our Feeds


Monday, January 15, 2024

ShortNews Admin

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடு தேடிச்சென்று உலர் உணவு வழங்கிய றிஸ்லி முஸ்தபா.!



(எம்.என்.எம்.அப்ராஸ்) 


நாட்டில் ஏற்ப்பட்ட சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் அணைக்கட்டுகள் திறக்கப்பட்டமையால் மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கி பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு மழை வெள்ள நீர் உட் புகுந்து மக்கள் கடுமையான அசௌகரியங்களைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில் பொது மக்களுக்கு உதவும் முகமாக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை மாநகர மக்களுக்கு முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மர்ஹும் மாயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபாவினால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. 


சாய்ந்தமருது வோலிவெரியன் பகுதியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள்,றிஸ்லி முஸ்தபா கல்வி உதவி மற்றும் சமூக சேவை அமைப்பின்(Rizley Musthaffa Education Aid Social Service Organization)பூரண அனுசரனையில்,சாய்ந்தமருது பையின் ஸ்டார் சமுக நலன்புரி அமைப்பின்(Fine Star Social Welfare) ஊடாக மாயோன் நிறுவனத்தின் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபாவினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி அவர்களுக்கான உணவு பொதிகளையும் நேற்று (14) வழங்கி வைத்தார். 


இதேவேளை கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் நந்தினி அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க நற்பிட்டிமுனை தமிழ் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உலர் உணவு பொதிகளை றிஸ்லி முஸ்தபா நேற்று (14) வழங்கி வைத்தார். 


மேலும் கல்முனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு றிஸ்லி முஸ்தபா அவர்களினால் உலர் உணவு பொருட்கள் வழங்கி இன்று(15)வைக்கப்பட்டன.கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.நிஸார் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. 


கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.நிஸார் தலமையிலான 13ம் வட்டார வெள்ள நிவாரண அணியோடு நேற்றைய தினம்(14)முன்னாள் அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் புதல்வர் நேரடி விஜயம் செய்து, அனர்த்தம் தொடர்பாக கள நிலவரத்தை ஆராய்ந்து உதவி செய்வதாக வாக்குறுதியளித்த நிலையில் இன்றைய தினம் (15) உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »