பெதுருதுடுவ கடற்கரை வீதி, முனை பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீன் பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் ரெஜிபோம் பேட்டி மற்றும் பிளாஸ்டிக் களஞ்சியசாலையில் ஒன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் உடபுஸ்ஸல்லாவ மற்றும் லோமன்வத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 45 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.