Our Feeds


Saturday, January 13, 2024

SHAHNI RAMEES

அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை துஷார இந்துனில் எம்.பி..!


 முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு

எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவோமென பாராளுமன்ற உறுப்பினர் துஷாரா இந்துனில் தெரிவித்துள்ளார்.


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல செய்த மோசடி மற்றும் ஊழல் அம்பலமாகியுள்ளது.ஆனால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சு பதவி மாத்திரமே மாற்றப்பட்டது. அவர் இன்னும் கேபினட் அமைச்சராக இருக்கிறார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் அதிகாரிகள் சிறையில் உள்ளனர். அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே முன்னாள் செயலாளரும் பணியை செய்துள்ளார். செயலாளர் கடிதங்களில் கையொப்பமிட்டுள்ளதால் சட்ட ரீதியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்,ஆனால் அறிவுறுத்திய முன்னாள் சுகாதார அமைச்சரை அரசாங்கம் ஏன் கைது செய்யாதுள்ளது.


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை காப்பாற்றிய தரப்புக்கு இந்த தேர்தலில் இடம் இருக்கிறதா இல்லையா என்ற விடயத்தையும் பார்த்துக்கொள்ள முடியும் எனவும் துஷார இந்துனில் தெரிவித்தார்.


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீண்டும் முன்வைக்குமாறு நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரும், சிவில் அமைப்புகளும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என்றும் அவர் நிச்சயமாக ஜனாதிபதியாக வருவார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்குகள் பிளவுபடும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்.ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற மாட்டார் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எமக்கு நம்பிக்கை உள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தி,ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்குகளையும் வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் அண்மையில் அறிவித்துள்ளனர்.


ஆனால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எவரும் முன்வரமாட்டர்.ஐக்கிய மக்கள் சக்திக்கு திறமையான தலைவர் இருக்கிறார்.அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. சஜித் பிரேமதாசவுடன் நாளுக்கு நாள் பெருந்திரளான மக்கள் திரண்டு வருகின்றனர்.


வரலாற்றில் உருவாகும் மிகப்பெரிய பரந்த கூட்டணியை உருவாக்குவோம்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அணி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. சஜித் பிரேமதாசவே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்.



பூஜ்ஜியத்தை அடைந்த ரணில் விக்கிரமசிங்க எப்படி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும். ராஜபக்ச முகாமை சேர்ந்தவர்கள் பல்வேறு நபர்களை ஜனாதிபதி வேட்பாளர்களாக முன்னிறுத்துகின்றனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்காளர் அடித்தளம் இல்லாததால்,மொட்டுக்கட்சியின் எஞ்சியிருக்கும் வாக்காளர் அடித்தளத்துடன் அவர் எழ பார்க்கிறார்.



பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அமைச்சரினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள யுக்திய திட்டம் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.நாட்டில் பாதாள உலகத்தை இல்லாதொழித்து போதைப்பொருள் கடத்தல்காரர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். சமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.


 


ஆனால் யுக்திய திட்டம் என்ற போர்வையில் அரசியல் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்துவது நியாயமற்றது.சிறிய துரும்புகளை பிடிக்காது பிரதான கடத்தல்காரர்களை கைது செய்ய வேண்டும்.


 


யுக்திய என்ற போர்வையில் சட்டத்திற்குப் புறம்பாக சட்ட விரோத நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »