பொருளாதாரத்தை முறையாக நிர்வகிக்காவிட்டால் நாட்டு மக்கள் அனைவரும் தட்டை எடுத்துக்கொண்டு வெவ்வேறு நாடுகளில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரண்டு வெங்காயம், ஒரு கேரட் என வீடுகளுக்குச் செல்லும் மக்களைப் பார்ப்பது மனதை நெருடுவதாகக் கூறிய அவர், இந்தப் பிரச்சினையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகளுக்கு வழி இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
VAT வரியை அதிகரிப்பதன் மூலம் ஜனாதிபதிக்கு மகிழ்ச்சி கிடைக்காது என தெரிவித்த அவர், என்றைக்கும் கடன் கேட்டு நடமாடும் தலைமுறையை உருவாக்குவது ஜனாதிபதியின் பார்வையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.