பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
இதன்காரணமாக மலையை ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. புகையிரதத்தை திருத்தப்பணிகளுக்காக நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இருந்து மாற்று புகையிரதத்தை அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டை மற்றும் பதுளையில் இருந்து புறப்படவிருந்த புகையிரதங்களின் பயணிகள் பேருந்துகள் மூலம் அவர்களது போக்குவது இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.