சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று நள்ளிரவில் ரிக்டர் அளவுகோலில் 7. 2இல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனா - கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜின் ஜியாங் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகர் டெல்லி முதல் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சுமார் 47 பேர் வரை இடிபாடுகளில் புதைந்ததாகவும் 200 க்கும் மேற்பட்டோர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் சீனவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.