Our Feeds


Thursday, January 4, 2024

News Editor

உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்


 கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இன்று (04) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.


அதன்படி, இம்முறை 2,302 பரீட்சை மத்திய நிலையங்களில் மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியுள்ள நிலையில், 319 ஒருங்கிணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக உயர்தர பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.


சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய இடையூறுகளை தவிர்ப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 எனும் இலக்கத்திற்கு அல்லது பரீட்சை திணைக்களத்தின் 1911 எனும் இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »