Our Feeds


Sunday, January 28, 2024

SHAHNI RAMEES

பாகிஸ்தானில் அதிகரிக்கும் நிமோனியா பரவல்..!






பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நிமோனியா

பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.


பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் கடும் குளிர் காரணமாக நிமோனியா பரவல் மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 




குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பஞ்சாப் மாகாணத்தில் கடந்த ஒரே மாதத்தில் 244 குழந்தைகள் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாப் மாகாணத்தில் புதிதாக 942 பேருக்கும், லாகூரில் 212 பேருக்கும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமோனியா பரவலை கட்டுப்படுத்த பாகிஸ்தான் சுகாதாரத்துறை பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »