காலி சிறைச்சாலையில் 7 கைதிகள் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காலி சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
5 கைதிகள் காய்ச்சல் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (06) மேலும் இரு கைதிகள் காய்ச்சல் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர், காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தமைக்கு மூளைக் காய்ச்சலே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, காலி சிறைச்சாலையில் பார்வையாளர்களை பார்வையிடுவதற்கும் ஏனைய நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கும், புதிய கைதிகளை அகுணுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பவும் சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.